திண்டுக்கல் மாவட்டம் வீரபுடையான்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 17 மாணவிகள், 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து இருந்ததால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வகுப்பறைகள் இடிக்கப்பட்டது.
இதனால் திறந்த வெளியிலும், கலையரங்கத்திலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வந்து. இந்த நிலையில் இன்று மதியம் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது ஒரு மாணவியின் தட்டில் பள்ளி கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்துணவு பணியாளர்கள் உடனடியாக ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், மாணவர்கள் அனைவரையும் சிகிச்சைக்கா கன்னிவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பள்ளி விழுந்த உணவை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.