சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது.
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஐ.ஐ.டி.யில் உள்ள அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104 இருந்தது.இந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 183 ஆக அதிகரித்துள்ளது.
Read more – பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
சென்னை ஐ.ஐ.டி.யில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் இயங்காது எனவும்,தற்போது படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் கல்வி பயிலவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.