சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் :
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் காணப்படுகிறது.இந்த மண்டலங்களில் இருந்து தினமும் சுமார் 500 டன் குப்பைகள் சேகரிக்க பட்டு லாரிகளில் ஏற்றவும், தெருக்களைச் சுத்தப்படுத்தவும், சாக்கடைக் கால்வாய்களில் அடைப்புகளை சரிப்படுத்தவும் 1,050 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.
மேலும், இவர்களை தவிர மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தினக்கூலி அடிப்படையில் 1,500 தூய்மைப் பணியாளர்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒரு மாத சம்பளம் தாமதம் ஆனபோதே, தங்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று (பிப்.8) சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மண் சட்டிகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read more – விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்குங்கள் : பிரியங்கா சோப்ராவிடம் கோரிக்கை வைக்கும் மியா கலீபா
இதுகுறித்து மாநகராட்சி பணியாளர் சங்கத்தலைவர் ஜீவானந்தம் தெரிவிக்கையில், டிசம்பர், ஜனவரி முடிந்து பிப். 8- ஆம் தேதி ஆகியும், முந்தைய மாதங்களுக்கான ஊதியம் வழங்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர். இதனால் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களும் குடும்பம் நடத்த போதிய வருவாயின்றி தடுமாறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.