டிசம்பர் 31 வரை சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொற்று பாதிப்பு குறையத்தொடங்கிய பின்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கை தமிழக அரசு படிப்படியாக தளர்த்தி கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் டிசம்பர் 31 வரை மேலும் ஒரு மாதம் ஊரடங்கு தொடரும் என்று அறிவித்தார்.மேலும் அதன் தொடர்ச்சியாக சில தளர்வுகளும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.அந்த பட்டியல் பின்வருமாறு:
*விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் இயங்க அனுமதி
*மதம், பொழுதுபோக்கு,அரசியல் போன்ற கூட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் ஆணையரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.
*டிசம்பர் 1 ம் தேதி முதல் உள் அரங்கங்களில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
*இதில் அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்க அனுமதி, உள் அரங்கங்களில் மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி
*டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்கள் மெரினா போன்ற கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.
டிசம்பர் 7ம் தேதி முதல்..
*தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில்,கல்லூரிகள் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் முதல் தொடங்குகிறது.
*மருத்துவம், அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் தொடங்குகிறது
*கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகள் தொடங்குகிறது.
*மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி.