தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் தனி நலவாரியத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை :
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11 ம் தேதி விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்பொழுது பேசிய அவர், சுமார் 4 லட்சம் தீப்பெட்டி மற்றும் பட்டாசு
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்படும் வகையில் தனி ஒரு நலவாரியம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த 62 ஆயிரத்து 661 தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்களை முன்னிலையாக கொண்டு இந்த நலவாரியம் ஆரம்பிக்கப்படும். மேலும், இன்றைய கணக்கெடுப்பின் படி சுமார் 1,250 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 870 தீப்பெட்டி தொழிற்சாலைகள் அரசிடம் உரிமை பெற்று இயங்கி வருகின்றனர்.
Read more – அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டு பயன்பெறலாம் எனவும், இந்த நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.




