தி.மு.க தலைவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசிய இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மிகவும் மோசமாக நடந்து வருகிறார். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. இது என்ன பொழப்பு… தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீற்றை ஸ்டாலின் கீழே கொட்டுகிறார்.
பள்ளிவாசலுக்கு போனால், நோன்பு கஞ்சி குடிக்க கொடுத்தால், குடிக்க வேண்டும். குடிக்க மறுத்தால் பள்ளிவாசலுக்கு உள்ளே போகவேண்டாம். சர்ச்சுக்குள்ள ஸ்வீட் கொடுத்தால் அதை சாப்பிட வேண்டும்.
பிடிக்கவிலலையா.. அப்படி என்றால் அங்கே போகாதே. அந்த மாதிரி தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீறு கொடுப்பது வழக்கம். அங்கே தீபாராதனை காட்டி திருநீறு தருவார்கள்..
அம்மா புரட்சித்தலைவி அங்கே போயிருக்கிறார்கள். அவருக்கும்தான் திருநீறு தந்தார்கள். மனசார வாங்கி நெற்றியில் பூசினார் ஜெயலலிதா. ஆனால், ஸ்டாலினோ திருநீற்றை கீழே கொட்டுகிறார். பிடிக்கவில்லையா. பக்கத்தில் இருப்பவரிடம் தந்திருக்கலாம்.. இல்லையென்றால் திருநீறு பூசுறது எனக்கு வழக்கம் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.. கேட்டால் கொள்கைன்னு சொல்றார்.. என்ன கொள்கை இருக்கு ஸ்டாலினுக்கு? உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் போகிறார்.. வீட்டில் நவராத்திரி கொலு நடத்துகிறார்.. உன் பெயரில் அர்ச்சனை செய்கிறார்.. நீ மட்டும் அடுத்த சாமி கும்பிட போகாதே., திருநீறு வைக்காதே… குங்குமம் வைக்காதே… நாமம் போடாதே என கிண்டலும், கேலியும் பேசுகிறாய்” என்றார்.
தி.மு.க தலைவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசிய இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.




