சென்னை முகப்பேரில் வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சித்த மூன்று பேர் கொண்ட கும்பலை போலீஸ் தேடி வருகிறது.

சென்னை முகப்பேர் கிழக்கு ராஜரத்தினம் சாலை ரத்தினவேல் பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் பிரகதீஷ் வயது 24. தனியார் விற்பனை பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10. 30 மணியளவில் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் பிரகதீசை அவரது வீட்டின் அருகே வழிமறித்து ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரகதீசை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆட்டோவில் வந்த 3 மர்ம நபர்கள் யார் எதற்காக பிரகதீஷ்ஷை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்ற கோணத்தில் ஜே ஜே நகர் காவல் ஆய்வாளர் பெருந்துரை முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




