தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை அடுத்த 5 ஆண்டுகளும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் நடந்த அ.தி.மு.க பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை அடுத்த 5 ஆண்டுகளும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது :
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழகம் சீரழிந்துவிட்டதாக சில தேசிய கட்சிகள் தொடர்ந்து குறைக்கூறி வருகிறார்கள். இந்த திராவிட இயக்கத்தின் ஆட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காக சில தேசிய கட்சிகள் திட்டமிட்டு வருகிறது.ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆனபிறகும் கூட தமிழக அரசு பல்வேறு துறைகளில் மத்திய அரசிடம் பல்வேறு விருதுகளை பெற்றுவருகிறது.
Read more – தமிழகத்தில் 38 வது மாவட்டமாக உதயமாகியது மயிலாடுதுறை :தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கூட அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைக்கும். இன்னும் 50 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் என்று தெரிவித்தார். மேலும் அவர், கூட்டணியில் எந்த தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமைக்கும், எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்ற எண்ணத்தோடு யாரும் எங்களை பின்தொடர வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.