புழல் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க திருவள்ளுவர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர்:
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றனர்.இதனால் சென்னையின் குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை கடந்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க திருவள்ளுவர் கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.இதன் படி முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு அதன்பிறகு மழைப்பொழிவின் அளவை கணக்கில் கொண்டு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது.