முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிங்கார பகுதியில் ஒற்றை காட்டு யானை காயங்களுடன் சுற்றித் திரிந்தது. காதில் ரத்தம் சொட்ட சொட்ட உலா வந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தநிலையில் தான் அந்த யானைக்கு சிலர் தீவைத்த வீடியோ காட்சிகள் வெளியாகின. மசினகுடியில் சொகுசு விடுதி நடத்தி வந்தவர்கள் தான் தீவைத்தனர் என்பதை வனத்துறை கண்டுபிடித்தது.

இதையடுத்து அதில் இருவர் கைது செய்யப்பட்டனர. யானைக்கு தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல் தெரிவித்துள்ளார்.சாக்குப்பையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து யானை மீது வீசியுள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.




