திருநெல்வேலி தி.மு.க. 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி ஆகிய மாவட்டங்கள், கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் விவரம்.
புதிய பொறுப்பாளர்கள்
- திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் தொகுதிகள் இடம்பெறும். இந்த மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன் செயல்படுவார்.
- திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள் இடம்பெறும். இதற்கு பொறுப்பாளராக அப்துல் வஹாப் செயல்படுவார்.
- தென்காசி வடக்கு மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் கடையநல்லூர் தொகுதிகள் இடம்பெற உள்ளது. பொறுப்பாளராக துரை செயல்படுவார்.
- தென்காசி தெற்கு மாவட்டம் சங்கரன்கோவில் (தனி), தென்காசி மற்றும் ஆலங்குளம் தொகுதிகள் இடம்பெறும். இந்த மாவட்ட பொறுப்பாளராக சிவபத்மநாதன் செயல்படுவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.