கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்துக்காக தந்தையே குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளார்.

விழுந்தையம்பலம் அருகே அரசர் குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், கடந்த 19 வருடம் முன் கீழ்குளம் பகுதியை சேர்ந்த சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்டெபி, ஸ்டெபின் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். செல்வராஜ் கடந்த 9 ஆண்டுகளுக்கு மனைவி சுதா மற்றும் இரு குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார். பின்னர் அவ்வபோது சுதா வீட்டிற்கு வரும் செல்வராஜ் தன் பெயரில் இருந்த நிலங்களை விற்பனை செய்து விட்டு பணத்துடன் தலைமறைவாகி விடுவார் என்று கூறப்படுகிறது. மனம் உடைந்த சுதா நோய் வாய்ப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வராஜ் இரு குழந்தைகள் மற்றும் மாமியார் ராஜத்தையும் தான் பார்த்து கொள்வதாக கூறி வீட்டிலே வைத்து கவனித்து வந்தார். ஆனால் மனைவி இறந்த 41 நாளிலேயே குளச்சல் பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அதற்கு இடையூறாக இருந்த மாமியார் ராஜத்தை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதையடுத்து குழந்தைகளையும் சித்ரவதை செய்துள்ளார். குழந்தைகள் இருவரும் உறவினர்கள் மூலம் போலீசுக்கு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு செல்வராஜ்ம் அவரது மனைவியும் தலைமறைவாகியுள்ளனர்.