தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுதுபவர்களுக்கு கீழ்கண்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

- கோவை-சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் (ரயில் எண்: 06101) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (06102) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடையும் .
- நெல்லை-மதுரை (06103) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை அதிகாலை 5.15 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக மதுரை-நெல்லை (06104) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.




