சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் தன்னிடம் நலம் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை :
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த வாரம் விடுதலையான சசிகலா கொரோனா சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்தநிலையில், இவரது வருகை தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.
Read more – டெல்லி முதல்வர் மகளின் வங்கி கணக்கில் கைவைத்த மர்ம நபர் : வித்தியாசமான முறையில் நூதன திருட்டு
மேலும், அதிமுகவில் ஸ்லீப்பர்செல்லாக இருக்க எம்.எல்.ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாக கூட இருக்கலாம். ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்.
நடிகர் ரஜினிகாந்த் சசிகலா உடல் நலம் குறித்து நேற்று போனில் என்னிடம் நலம் விசாரித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.




