தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா இன்று கொரொனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 438வது திருவிழா, வரலாற்றில் முதன்முறையாக கொரொனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஜூலை 26ம் தேதி பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
தினமும் ஆலயத்திற்குள் மறைமாவட்ட ஆயர், பங்குத்தந்தையர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையின் பெருவிழாவாக கொண்டாப்படுகிறது. இதையொட்டி ஆயர் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை திருப்பலி நடைபெற்றது. பேராலய திருவிழாவின் சிறப்பு திருப்பலி நிகழ்வுகளை உள்ளூர் தொலைகாட்சியிலும், இனையதளத்திலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. திருப்பலியில் ஆயர்கள் எஸ்டி.செல்வராஜ் , பன்னீர்செல்வம் மற்றும் பங்குத்தந்தை குமாரராஜா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.