உபர் புதன்கிழமை இந்தியாவில் 24×7 ஆட்டோ வாடகை சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் ஒரு மணி நேரத்திலிருந்து தொடங்கி எட்டு மணி நேரம் வரை ஆட்டோவை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த சேவை இப்போது பெங்களூரில் தொடங்கி தற்போதுடெல்லி என்.சி.ஆர், மும்பை, ஹைதராபாத், சென்னை ,புனே ஆகிய இடங்களில் செயல்படுகின்றது. அதிகபட்சம் எட்டு மணிநேரம் வரை முன்பதிவு செய்யக்கூடிய பல மணிநேர தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் விருப்பத்துடன் ஒரு மணி நேரம் / 10 கி.மீ தொகுப்புக்கு விலை 169 ரூபாயிலிருந்து தொடங்குகிறது என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஓட்டுனர்களுக்கு செலுத்தும் பணத்தை உதவி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் பயன்பாட்டிற்காகவும் வாரம் ஒருமுறை பணத்தை டிரைவருக்கு செலுத்த உபர் முடிவு செய்துள்ளது.
எனவே தற்போது இந்த திட்டத்தின் மூலம் உபெரின் கொடுக்கும் பணம்வாரந்தோறும் தங்கள் டிரைவர்களை சென்றடைகின்றன.
அதேசமயம் ஆட்டோ டிரைவர்களுக்கு அவர்களின் அன்றாட செலவுகளுக்கு, குறிப்பாக எரிபொருள் செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே சில உபர் ஆட்டோ டிரைவர்கள் மட்டுமின்றி பல கேப் டிரைவர்கள் கூட தங்கள் வாடிக்கையாளர்களை தங்களுக்கு ரொக்கமாக செலுத்த விரும்புகிறார்கள். உண்மையில், கட்டணம் செலுத்தும் முறை பணமாக இல்லாவிட்டால் ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரிகளை ஏற்க மாட்டார்கள்.
நிச்சயமாக இது பயணிகளுக்கு சிரமமாக இருக்கிறது, ஏனெனில் ஒருவர் சரியான தொகையை வைத்திருக்க வேண்டும், ஆனால் இப்போதெல்லாம் ஏடிஎம்கள் பெரும்பாலும் ரூ.500 நாணயத்தாள்களை வழங்குகின்றன. குறிப்பாக தொற்றுநோய்களுக்கு மத்தியில், ஓட்டுநர்களுக்கு சரியான சில்லரை கொடுப்பதே கடினமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற பேக்கேஜ் திட்டம் எவ்வளவு பணத்தை கொடுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட உதவுகிறது.