தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நிவர் புயலே போய்விடு என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவதை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உருவாகி உள்ள நிவர் புயல், இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், நிவர் புயலே போய்விடு என்று கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுக்குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போ புயலே.. போய்விடு…. பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல்.. வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல்… குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் … பாமர உடல்களைப் பட்டம் விடாமல்.. சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு… ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? என புயல் குறித்து பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் நிவர் புயல் குறித்ததான இந்தக் கவிதை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.




