சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் – முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அவர்களில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ளார். காதல் திருமணம் செய்து கொண்டவர். சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், கிருஷ்ணகிரியில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந் நிலையில் தற்போது, வித்யா ராணி பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.