வேலூர் – திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2013ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றியவர் அசோகன். இவர் பணியாற்றி காலத்தில் பணியாளர் நியமான உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்துதாகவும், அசோனன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 கோடி வரை சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் அருகே மேல எரூக்காட்டூரில் உள்ள அசோகன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே அசோகனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




