தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளைக் கொண்டாடப்படுவதையொட்டி, இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விநாயகப் பெருமாளின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணாலான சிலைகளை வைத்து வழிபடுவர். ‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது.
விநாயகப் பெருமாளின் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துக்கள் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




