மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை அடுத்த தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகிறது. இதற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலின்படி, மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம். கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள் பங்கஜ் ராகவ், வனஜாக்ஷம்மா, பிரசாந்த் லாவனியா மற்றும் சண்முகம் சுப்பையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
4 மருத்துவர்கள் கொண்ட குழுவில் இருக்கும் சண்முகம் சுப்பையா, சென்னையில் மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.