திமுக போன்ற நரகாசுர இயக்கத்தை மீண்டும் ஆட்சி அமைக்க விடமாட்டோம்..2021 ல் அதிமுக ஆட்சி தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுக கட்சி குறித்து வெளிப்பட்ட கருத்து பின்வருமாறு :
திமுக போன்ற நரகாசுர ஆட்சியை மக்கள் இனிமேல் தலைதூக்க விடமாட்டார்கள்..அடுத்து வர இருக்கும் 2021 ல் தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைத்து மீண்டும் மக்களுக்கு நல் ஆட்சியை அமைத்து தரும் என்று கூறினார்.மேலும் அவர் தமிழகத்தில் பா.ஜ.க சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தினால் அதற்கான தண்டனையையும் அதிமுக ஆட்சி பெற்று தரும்.கொரோனா தொற்றுக்கு பயந்து வீட்டிற்குள் 4 சுவற்றுக்குள் இருந்து வெறும் பதிவுகளை மட்டும் நடிகர் கமல் போடாமல் வெளியே என்ன நடக்கிறது என்று எட்டி பார்க்க வேண்டும்.அவர் கூறினார்.