பிரதமரின் வருகையால் சென்னை மெட்ரோவில் இன்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அப்போது 4 ஆயிரத்து 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, 3 ஆயிரத்து 640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திபட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவை உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.