சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் இயங்கிவருகிறது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பாதிக்கப்பட்ட முதியோர்கள்,பெண்கள்,குழந்தைகள்,ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை உடனடியாக நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டுவருகிறது.
மேலும், இப்பணி சிறந்த முறையில் மக்களை சென்றடையவும், உடனடியாக குறைகளை களையவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களால் 9150250665 என்ற அலைபேசி எண் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது . கடந்த வெள்ளிக்கிழமை முதல் ( 07-08-2020 ) செயல்படத் தொடங்கியது அலைபேசி எண்ணை தொடர்புகொண்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து புகார் அளிக்கலாம்.





