பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் எல்லாருக்கும் ஆல் பாஸ் போடுங்க என்று பிரேமலதா விஜயகாந்த்திடம் தெரிவித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேமுதிகவுடன் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து 15 கொடுக்கப்பட்டதாகவும் அதற்கு தேமுதிக மறுப்பு தெரிவித்து கூட்டணியை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்து வருகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 02.03.2021!!!
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த 12 ம் வகுப்பு மாணவர் ஒருவர் பிற வகுப்பு மாணவர்களை ஆல்பாஸ் செய்வது போல எங்களையும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அப்பொழுது பிரேமலதா விஜயகாந்த் “ஒழுங்கா படிச்சு எக்ஸாம் பாஸ் பண்ணு, இல்ல உதை வாங்குவ” என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். அப்பொழுது அங்கு சிரிப்பலை அதிர்ந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களை தவிர பிற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில் 12 ம் வகுப்பு மாணவர்களும் தற்போது அதையே எதிர்பார்த்து வருகின்றனர்.