தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை சகிலாவிற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை :
நடிகை சகிலா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார், மேலும், இப்பொழுது இருக்கும் 90′ ஸ் கிட்ஸ்களுக்கு இவரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. சமீப காலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து, சகிலா மேலிருந்த ஒரு தவறான பிம்பமும் மாறியது.
இந்தநிலையில், நடிகை சகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். தற்போது அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.