தமிழக மக்களின் அன்பையும் பேராதரவையும் பெற்ற அமமுக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் :
நாமக்கல்லில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிடிவி தினகரன் கூறியதாவது; தமிழக மக்களின் அன்பையும் பேராதரவையும் பெற்ற அமமுக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், பதவியை துச்சமென கருதி அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நம்முடன் உள்ளனர். சசிகலாவை வரவேற்றது தமிழக மக்களை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் வியந்து பார்த்தனர் என்று கூறினார்.
Read more – ஆளும் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் : புதுச்சேரி எதிர்க்கட்சியினர் மனு
அதனைத்தொடர்ந்து, தற்போது பதவியில் இருப்பவர்களை அடையாளம் காட்டியது சசிகலாதான்; வருகிற தேர்தலிலும் சசிகலா அடையாளம் காட்டுபவர்களே அதிமுகவில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.