சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அமுமக தலைமை கழகத்தில் கடந்த 3 ம் தேதிமுதல் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்தது. விருப்ப மனு வழங்கியவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் வருகிற 8 மற்றும் 9 ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் எனவும் அமுமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேர்காணல் நடந்த இன்று வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; “வாக்குகள் சிதறாது என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்கள் எங்களுக்கு வாக்குகள் அளிப்பார்கள். மற்ற கட்சிகளை பற்றி நாம் பேசுவதில்லை. நாங்கள் மாபெரும் வெற்றியை பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம். இந்த சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான தர்மயுத்தம் தொடங்குகிறது. நாங்கள் அதர்மத்தையும் எதிர்க்கிறோம். துரோகத்தையும் எதிர்க்கிறோம் என்றார்.
Read more – நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை துண்டு சீட்டாக மாற்றிக்கொண்டார் ஸ்டாலின் – கமல் காட்டம்
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.