சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் டிடிவி தினகரனை சந்தித்தது அமமுகவில் இணைந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை :
கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ சுப்பிரமணியன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்றதால் அவர் பதவி பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜவர்மன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
Read more – மம்தா மீதான தாக்குதல் வெட்கக்கேடானது – மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து
இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாளராக இருந்த ராஜவர்மன். அதன்பிறகு அடிக்கடி இவருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்ந்து ஏற்பட்டு ராஜவர்மனை ராஜேந்திர பாலாஜி புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அமமுகவில் ராஜவர்மன் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சரின் கைகூலிக்குதான் பதவி என்றாகி விட்டது. அதிமுக இயக்கத்திற்காக பாலாஜியா அல்லது பாலாஜிக்கு இயக்கமா என்று தெரியவில்லை. அவரை எதிர்த்ததால் தான் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. என்னை கொலை செய்து விடுவதாக பல மிரட்டல்கள் விடுத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. வேட்பாளர் பட்டியலில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு இல்லை என தெரிவித்துள்ளார்.