அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதால் எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி :
தமிழகத்தில் இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வெங்கடேஸ்வரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது ;
திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக தொண்டர்களை நம்பாமல் பல லட்சம் கோடி செலவு செய்து பீகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிசோரை நம்பி தேர்தலில் போயிடுகிறார்கள். அவருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லாத போது பொதுமக்கள் எப்படி அவரை நம்புவார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரே ஒரு தகுதி மட்டுமே உள்ளது. அது கருணாநிதியின் மகன் என்பது மட்டுமே.
Read more – தாமரை மலரும்… தமிழ்நாடு வளரும்… திக்கி திணறி தமிழில் வாக்கு சேகரித்த நமீதா…
ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு விவசாயி என்னும் மிக பெரிய தகுதி உள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதால் எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும். அதற்கு அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.