தேர்தல் நெருங்குவதால் எம்.ஜி.ஆருடன் மு.க. ஸ்டாலின் சொந்தம் கொண்டுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை :
மதுரை அடுத்த பாப்பாகுடி பகுதியில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை ஒரு கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது :
தமிழகத்தில் எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு செல்வாக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ளதால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஓட்டுக்காகவும், தேர்தலுக்காகவும் எம்.ஜி.ஆருடன் திடீர் உறவுமுறை கொண்டாடுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
Read more – ஏலத்திற்கு வரும் ஹிட்லர் பயன்படுத்திய “டாய்லெட் கவர் சீட் ” : வாங்க போட்டியிடும் முக்கியஸ்தர்கள்
தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக ஊழலுக்காக 2 முறை கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.