மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை :
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டபோது, கமல் அவர்கள் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை வானதியோடு நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், முதலில் பாரத பிரதமர் என்னுடன் விவாதம் செய்யட்டும். வானதி போன்ற துக்கடா அரசியல்வாதிகளை பேசிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
Read more – முதல்வர் குறித்த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் : ஆ. ராசா
இதையடுத்து, இதுகுறித்து வானதி சீனிவாசன் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கடின உழைப்பால் முன்னேறி வந்துள்ள தன்னைப் பார்த்து மக்கள் நீதி மய்யம் துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறது என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பியுள்ளார்.