தாயை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களை கடவுள் தண்டிப்பார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 26 ம் தேதி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர், ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து முதல்வர் வேட்பாளராகவும், நாளைய முதல்வராகவும் வர உள்ளார். அவர் முறையாக பிறந்தவர் என்றும், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர், எனவே அவர் கள்ள உறவில் பிறந்தவர் என்றும் விமர்சித்தார். ஆ. ராசா பேசிய இந்த பேச்சானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கே. குப்பனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில், ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் எப்படி கீழ்த்தரமாக பேசுகிறார்கள். ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்துவிட்டால் நினைத்து பாருங்கள். தாயை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களை கடவுள் தண்டிப்பார் என்றார்.
Read more – ராமேஸ்வரத்தில் மதிமுக தொண்டர்கள் கடலில் மிதந்து நூதன பிரச்சாரம்… கடலில் தத்தளித்த உதயசூரியன்…
மேலும், ஒரு ஏழை தாயாக இருந்தாலும் சரி, பணக்கார தாயாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அவர் தாய் தான் உயர்ந்த ஸ்தானம். தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.