உதட்டளவிலும், உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்ய கூடியவர் கமல்ஹாசன் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரு தினங்களுக்கு முன்பு, அப்பகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை பார்த்து துக்கடா அரசியல்வாதிகளிடம் அப்பறம் பேசிக்கொள்கிறேன். முதலில் பாரத பிரதமர் என்னுடன் விவாதம் செய்யட்டும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், நேற்று சொர்ணலதா லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி ஸ்ரீனிவாசன், நான் இதுவரை மக்களுக்கான சேவைகளை மட்டுமே செய்து வருகிறேன். என்னால் இந்த தொகுதி மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன்.
Read more – பாஜக தேர்தல் விளம்பரத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி படம் … பதறிப்போன ப. சிதம்பரம் குடும்பம்..
ஆனால், நேற்று கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் மோடியுடன் விவாதம் செய்ய வேண்டுமா ? மத்திய அரசிடம் பேசி எவ்வாறு திட்டங்களை நிறைவேற்றுவார். இதுவரை அவர் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார். உதட்டளவிலும் உதடுகளுக்கும் மட்டுமே கமல்ஹாசன் சேவைகளை செய்து வந்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.