உதயசூரியன் சின்னத்திற்கான உலக சாதனைக்குரிய அங்கீகார சான்றிதழை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.

சென்னை :
உதயசூரியன் வடிவத்தில் 6000 தொண்டர்களை நிறுத்தி தி.மு.க உலக சாதனை படைத்து இருக்கிறது. 6000 திமுக கட்சியை சார்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி உதயசூரியன் வடிவத்தில் நின்றுள்ளனர். இந்த சாதனையானது Asia book of records என்ற உலக சாதனை அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, Largest Human Image of Rising Sun என்கிற அடிப்படையில் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது சென்னை கொட்டிவாக்கம், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உலக சாதனைக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
Read more – முழுவதும் கலைக்கப்படுகிறதா ? புதுச்சேரி அமைச்சரவை.. தொடர்ந்து தொல்லை கொடுக்கும் கிரண் பேடி..
நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உலக சாதனை படைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உதயசூரியன் வடிவத்திலான நேரடி காணொளி முன்பு புகைப்படத்தையும் எடுத்து கொண்டார்.




