இந்தி எதிர்ப்புக்கு எதிராக இளம் வயதில் போராடினேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Read more – கோவை மக்கள் கமலை பார்க்கத்தான் வருவார்கள், வாக்களிக்க அல்ல – தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன்
இந்தநிலையில், கும்மிடிப்பூண்டியில் நடந்த திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது : என்னுடைய 13 வயதில் திருவாரூரில் இந்திக்கு எதிரான போராட்டத்தில் கலைஞருடன் பங்கேற்றேன். மாணவனாக இருந்த அப்போதே நான் மாணவர்களை திரட்டி இந்திக்கு எதிராக வீதியில் களமிறங்கி போராடினேன். மாணவரணி, இளைஞரணி உள்ளிட்ட பல பதவிகளில் பொறுப்பு வகித்து இறுதியில் திமுக தலைவராகியுள்ளேன்.