வருகிற மார்ச் 8 ம் தேதிக்குள் பிற கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கட்சி விருப்பமனு அளித்த நபர்களிடம் நேர்காணல் நடத்தியது. மேலும், தி.மு.க வேட்பாளர் பட்டியல் 10 ம் தேதி வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டணி கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் தலா 6 தொகுதிகளை பெற்று உறுதியான நிலையில்,காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு முடிவில்லாமல் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
Read more – அதிமுக கூட்டணியில் த.மா.கவுக்கு 3 தொகுதிகளா ? வெளியான தகவல்
மேலும், நாளை தி.மு.க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 8ம் தேதிக்குள் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து முடிக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.