தமிழ்நாட்டிற்கு பிரதமர் எத்தனைமுறை வருகிறாரோ, அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது கூறியதாவது ;
பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவிற்கு பாஜகவின் வாக்கு குறையப்போகிறது. அதுதான் நடக்கப்போகிறது. திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
Read more – இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று வந்த ஒரே சுகாதார அமைச்சர் நான் மட்டும் தான் : அமைச்சர் விஜயபாஸ்கர்
மேலும், நாளுக்கு நாள் தமிழக மீனவர்கள் படும் கஷ்டம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். பாஜக அரசோ, மாநில அரசோ இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தட்டி கேட்கவும் இல்லை. தமிழகத்தில் நம்முடைய திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம் . அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுக ஆட்சியை நிலைநாட்ட செய்யுங்கள் என்று தெரிவித்தார்.