வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்கு எந்திரங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ( ஏப்.6) நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. அதேபோல், 234 தொகுதிகளிலும் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவலும் கிடைத்தது.
மேலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு என்னும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, 24 மணி நேர சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்கு எந்திரங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்கு எந்திரங்களை பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்ட பிறகு அவற்றை காவல்துறையும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என இருந்துவிடக்கூடாது என்றார்.
Read more – முதல்வர் போட்டியில் தனக்கு தானே ஓட்டளித்த ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி…
தொடர்ந்து, பாதுகாப்பு மையங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் 24 மணிநேரமும் இரவு பகல் பாராமல் கண் விழித்து பாதுகாத்திட வேண்டும். தேர்தல் முடிந்து விட்டது என்று ஓய்வு எடுக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.