முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அரியர் பசங்க நாங்க என்ற பதாகையுடன் மாணவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தது வைரலாகி வருகிறது.
நாகை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைப்போடும் தமிழகமே என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Read more – குழந்தைக்கு தமிழில் பெயர் வையுங்கள்… ரூபாய் 5000 வெல்லுங்கள்… சீமான் அளித்த அதிரடி ஆபர்
அப்பொழுது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த மைதானத்திற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் மேலிருந்த மொட்டை மாடியில் மாணவர்கள் கூட்டமாக நின்று இருந்தனர். தீடிரென அந்த மாணவர்கள் ‘அரியர் மாணவர்கள் நாங்கள் எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு’ என்ற வாசகம் எழுதி நின்று அதிமுகவிற்கு ஆதரவு தந்தனர். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.