திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி குறை மட்டுமே கூறுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ராதிகா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி வைத்துள்ள சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மணிமாறன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் ராதிகா பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது;
திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி குறை மட்டுமே கூறுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இரு கட்சிகளும் வாக்களித்த 2 ஏக்கர் நிலம் மற்றும் செல்போன் எங்கே ? கடந்த 50 வருடங்களாக பொது மக்களிடம் பொய்களை மட்டுமே வாக்குறுதிகளாக வழங்கி பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என தெரிவித்தார்.
Read more – கன்னியாகுமரியில் மற்றொரு காமராஜர் இவர் தான்… பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம்…
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்றும், இது கொரோனா காலம் என்பதால் அனைவரும் மறக்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




