தமிழகத்தின் ரோல் மாடலாக இருக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அமர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் மக்களின் மனதை கவர புதிய புதிய வாக்குறுதிகளை வேட்பாளர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ; தமிழகத்தில் உள்ள 17 ஆயிரத்து 662 வருவாய் கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தில் இணைய வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டால் மக்கள் வெளிநாடுகளுக்கும் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
Read more – தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய மாவட்டம்… கடம்பூர் ராஜு உறுதி
மேலும், ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என்று பேசுகிறார். திண்ணையில் பெட்ஷீட் போட்டு மக்கள் குறைகளைத் தீர்க்கப் போவதாக பேசுகிற அவர், ஏன் இதற்கு முனைப்பு மக்களை சந்தித்து பேசவில்லை. முதலில் எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெறட்டும். அப்புறம் பேசலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழகத்தின் ரோல் மாடலாக இருக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.