முதல்வர் குறித்த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரி :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேலும், தற்போது முதல்வர் பழனிசாமியின் தாயார் பற்றி திமுக எம்.பி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Read more – கொள்கை ரீதியாக மோதுங்கள்… தனிநபர் தாக்குதல் வேண்டாம்.. திமுகவிற்கு எச். ராஜா அட்வைஸ்
இந்நிலையில், இதுகுறித்து நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்து ஆ.ராசா கூறியதாவது, ஸ்டாலின் அரசியல் மற்றும் முதல்வர் எடப்பாடி அரசியல் ஒப்பீடு மட்டுமே விளக்கம் கொடுக்க எண்ணினேன். எனது பேச்சானது தெரிந்தோ, தெரியாமல் முதல்வரை கண்கலங்க செய்து விட்டது. இதனால் என் அரசியல் வாழ்வில் கரும்புள்ளியாக இருந்து விடக்கூடாது. இதனையடுத்து தான் பேசியது தவறு என்றும் முதலமைச்சர் பழனிசாமி இடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.