சசிகலா மீது ஆரம்பம் முதலே எனக்கு எந்த வருத்தம் இல்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சசிகலாவின் விடுதலைக்கு பிறகு முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அதில் அவர், சிகலா மீது ஆரம்பம் முதலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஜெயலலிதா மறைவில் சிலர் சந்தேகம் எழுப்பினர். இதுபோன்ற பிரச்சனைகளால் சசிகலாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
அதனால் தான் நீதி விசாரணை நடத்தி சசிகலாவின் அவப்பெயரை துடைக்க நினைத்து, நீதிவிசாரணை அமைத்தேன். அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று பேசியுள்ளார்.