நாங்கள் ஆட்சிக்கு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே வந்து என்னிடம் கேள்வி கேட்கலாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதியான ஊனையூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற மறுநாள் முதல் இந்த புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். அப்படி கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வந்து என்னிடம் கேள்வி எழுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.
Read more – விருப்பமனு அளியுங்கள்.. விரைவில் சட்டமன்றத்தில் இடத்தை பிடியுங்கள்.. கமல்ஹாசனின் அடுத்த வியூகம்
அதனைத்தொடர்ந்து அரியலூரில் பேசிய அவர், திமுக கட்சி இன்னும் 3 மாதங்களில் ஆட்சி அமைத்துவிடும் என்றும், திமுக அரசு கொள்கை அரசாகவும், மக்களுக்கு சேவை செய்யும் அரசாகவும் அமையும் என்றும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் பொதுபிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்க்கப்படவில்லை, பொதுமக்களுக்கு அச்சத்தை தர கூடிய அரசாக அதிமுக அரசு அமைந்துவிட்டதாகவும் இன்னும் 3 மாதங்களில் நல்லாட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.