கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தீடிரென வாகனங்கள் நுழைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் நடைபெற்ற 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள ஜீ.சி.டி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது 5 அடுக்கு கண்காணிப்பும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி வருகின்ற மே 2 ம் தேதி நடைபெற இருப்பதால் திமுக, அதிமுக தொண்டர்களும் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று இரவு 10 மணியளவில் மொபைல் கழிப்பறை வாகனம் மற்றும் சாதாரண வாகனம் ஒன்றும் தீடிரென அந்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திமுகவினர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்காக கழிவறை இணைக்கப்பட்ட மொபைல் வேன் வரவழைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Read more – ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவை குறைத்த தமிழக அரசு..
இதையடுத்து, இரண்டு வாகனத்தையும் ஆய்வு செய்த தி.மு.க.வினர், வாகனங்களில் வாக்கு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் இல்லாததை உறுதி செய்தனர். தீடிரென நடத்தப்பட்ட இந்த சோதனையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.