ராமேஸ்வரத்தில் மக்களை கவர உதயசூரியன் சின்னத்தில் மதிமுக தொண்டர்கள் 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ராமேஸ்வரம் :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே வகையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது துணி துவைத்து, தோசை சுட்டு கொடுத்து வித்தியாசமான முறையில் மக்களை கவர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காதர்பாட்சாவை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியான மதிமுக தொண்டர்கள், மீனவரணி மாநில துணைச்செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் உதயசூரியன் சின்ன பதாகையை கையில் பிடித்தபடி பாம்பன் கடலில் 6 மணிநேரம் மிதந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Read more – இன்றைய ராசிபலன் 29.03.2021!!!
மேலும், இன்னும் தேர்தல் நடைபெற சரியாக ஒரு வார காலமே உள்ளதால் இதுபோன்று வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரை மாறி மாறி அவர்களின் குறைகளை மட்டுமே கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.