புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தி.முக. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னை அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
Read more – 216 வது முறையாக மனுதாக்கல் செய்யும் தேர்தல் மன்னன்….
இந்தநிலையில், புதுச்சேரியில் திமுக சார்பில் முதற்கட்டமாக 12 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும், பாகூர் தொகுதியில் மட்டும் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. அதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.