விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அமமுக பற்றி பேசினால் சப்புன்னு அடிச்சுப்புடுவேன் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் :
தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அதிமுக அமைச்சர்கள் அடுத்தது சர்ச்சைக்குரிய முறையில் பேசி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு சிலிண்டரின் விலை ரூ.4800 என்று கூறியது பல மீம்ஸ் வெளிவந்து சக்கைப்போடு போட்டது.
Read more – தரையில் ஊர்ந்து சென்று ஆட்சி பிடிக்க நான் என்ன பாம்பா ? பல்லியா ? முதல்வர் ஆவேசம்
தற்போது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அமமுக பற்றி கேள்வி கேட்டா இப்பவே கிளம்பிரு.. இல்லேனா சப்புன்னு அடிச்சிருவேன் என்று செய்தியாளர்களை அவர் மிரட்டினார். அமைச்சர் பேசிய இந்த பேச்சானது சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனமாகி வருகிறது.




