முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை :
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி பட்டியல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.திமு.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம்.
Read more – திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ம் தேதி வெளியிடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மேலும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிந்துள்ளது. அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற நேர்காணலில் விருப்பமனு தாக்கல் செய்த 8 ஆயிரத்து 200 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.